Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் இனி எல்லாமே ரொம்ப ஈசி…. மொபைல் நம்பரே தேவையில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உங்களது சுய விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக இந்த வேலையை முடித்து விடலாம்.

மொபைல் நம்பர் அப்டேட் செய்வது மற்றும் புகைப்படத்தை மாற்றுவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஆதார் சேவையின் மையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவரின் ஆதார் கார்டில் மொபைல் நம்பர் என்பதை மிக முக்கியமான ஒன்று. மொபைல் கையில் இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருந்தது.

இனி அந்த சிரமம் இருக்காது. அதாவது எந்த ஒரு மொபைல் நம்பரை வைத்து இனி ஆதார் கார்டில் அப்டேட் செய்யும் புதிய வசதியை ஆதார அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆதார் கார்டில் அப்டேட் செய்யும் போது மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டி இருக்கும். இந்த வசதி ஆதார் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. ஒரே ஒரு மொபைல் நம்பரை வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்யலாம். ஆதார் ஆதேன்டிகேஷனுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |