தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதனை தினமும் ஆய்வு செய்து செயற்பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் ஆதார் இணைப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர பதாகைகளை வைக்க வேண்டும் எனவும் ஆதார் எண்ணை இணைக்க வரும் நுகர்வோரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்களை மின்வாரியம் எச்சரித்துள்ளது.