Categories
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு….. மாணவர்களே உடனே செஞ்சிடுங்க….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில், இந்த நிலையில் ஆதார் எண்களை இணைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் பதிவு எண் இல்லாதவர்கள், வங்கி கணக்கு, பான்கார்டு, பாஸ்போர்ட், குடும்ப அட்டை உள்ளிட்ட 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம். ஆனால், மாணவிகள் சேரும் கல்வி நிறுவனங்கள் அவர்கள் ஆதார் பெற தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |