ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஓர் வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் இடம் பெறுவதை தடுக்க ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தப் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.இது ஆரம்ப கட்ட ஆலோசனைதான் என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் வந்த பின்னரே ஆதார் -வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்துவிட்டால் தனிநபர் தகவல் திருட்டு, தேர்தல் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆதாரை இணைப்பது என்பது வெறும் சரிபார்ப்பு நோக்கத்துக்காக மட்டுமே தவிர தேர்தல் தொடர்பான தகவல்கள் கசிவு மற்றும் மோசடிகள் நடைபெறாது இதன் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.