ஆதார் அடையாள அட்டையில் இனி புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடிமகன் என்பதை உணர்த்தும் விதமாக ஆதார் அடையாள அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையின் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான உதவிகளையும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை, பான் கார்டு, சிலிண்டர் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவற்றை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் எண், முகவரி, பெயர் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்றால் ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். இதனையடுத்து தற்போது ஆதார் அட்டையில் புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் கெட் ஆதார் என்பதை கிளிக் செய்து ஆதார் அட்டை படிவத்தை அப்டேட் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கு கைரேகை, புகைப்படம் மற்றும் விழித்திரை ஸ்கேன் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். அதன் பிறகு 90 நாட்களில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையானது உங்கள் கைகளுக்கு கிடைத்து விடும். மேலும் ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் மாற்றக்கூடிய சேவை இருந்தாலும், புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நேரடியாக ஆதார் சேவை மையத்தை தான் அணுக வேண்டும்