Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை இருந்தா மட்டும் உள்ள வாங்க….. கல்யாண அட்ராசிட்டி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகின்றன. அதிலும் ஒரு சில திருமண நிகழ்ச்சிகள் காண்போரை வியக்க வைக்கும்.இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டதால் திருமணத்திற்கு வந்த பலராலும் மண்டபத்திற்குள் நுழைய முடியாததால் திருமண விழாவில் பங்கேற்காமல் அங்கிருந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |