Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் மட்டுமே எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய இயலும். அப்படியே ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது மிகவும் எளிதான ஒன்றுதான்.

அதற்கு முதலில் ஆதார் அட்டைதாரர் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று உங்களின் பயோமெட்ரி விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். அதன் பிறகு உங்களின் ஆதார் எண் மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய மொபைல் எண்ணை வழங்க வேண்டும். இந்த நடைமுறைக்கு பிறகு உங்களின் தரவுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மொபைல் எண் மாற்றம் செய்யப்பட்டு விடும். எனவே மொபைல் எண் மாற்றம் செய்யாதவர்கள் உடனே மாற்றிக் கொள்வது நல்லது.

Categories

Tech |