மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க தேர்வு செய்துள்ள இடம் பென்னிகுயிக் இருந்த இடம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எம்எல்ஏ செல்லூர் ராஜூ, பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து விட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க இருப்பதாக கூறினார்.
அதை மறுத்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 1911 ஆம் ஆண்டு பென்னிகுயிக் இறந்துவிட்ட நிலையில், அந்த குடியிருப்புகள் 1912 ஆம் ஆண்டிற்கு பிறகு கட்டப்பட்டது என்றார். இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நூலகத்துக்கு இருந்ததற்கான ஆதாரம் அளித்தால், திட்டத்தை காட்டத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். இரு முறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு ஆதாரமில்லாத கருத்து தெரிவிப்பது அவரின் மதிப்பை குறைத்து விடும் என்று முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.