Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் இடையே நட்பு… கண்டித்த குடும்பத்தினர்… மறுப்பு கூறிய 18 வயது ஆண்… குடும்பத்தினர் செய்த கொடூரம்…!!!

டெல்லியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த 18 வயது ஆண் நண்பரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள அதர்ஷ் என்ற நகரில் வசித்துவரும் 18 வயதுடைய ராகுல் ராஜ்புத் என்பவர், அப்பகுதியில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் தனது வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் நட்பு அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் ராகுல் தொடர்ந்து அந்த பெண்ணுடன் நட்பிலிருந்துள்ளார்.

அதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடந்த 7ம் தேதி இரவு அப்பகுதியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த ராகுலை வழிமறித்து வாக்குவாதத்தில் இறங்கினர். வாக்குவாதம் முற்றியதால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ராகுலை கடுமையாக தாக்கினர். அந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராகுலை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே உயிரிழந்த ராகுலின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி துணை முதல்-மந்திரி, அவரின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பாக பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார்.

Categories

Tech |