நாம் தமிழர் கட்சியின் சீமான் கொட்டத்தை அடக்க வேண்டும் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய மல்லை சத்யா, வன்முறையால் எதையும் சாதித்துவிட முடியாது எனவே உன்னுடைய கொட்டத்தை அடக்குவதற்கு இங்கே அனைவரும் நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். இனியும் தொடருமேயானால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்ற சவாலை முன்வைத்து அதற்கு ஆண்மையும், வலிமையையும் இருக்குமேயானால் நாளையும் தேதியும் குறியுங்கள் சந்திப்பதற்கு நாங்கள் வருகிறோம். இடத்தை நீங்கள் சொல்லுங்கள் என்ற பதிவையும் இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எனவே அன்பின் தோழர்களே இது ஒரு வன்முறையான பேச்சாக இருக்கலாம். இது ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த முடிவின் மூலமாகத்தான் நாட்டில் ஒரு உண்மையான ஜனநாயகம் வளர்ந்திருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகின்ற இடத்தில் நாம் நிற்க வேண்டும். எனவே தான் அண்ணன் பொழிலன் அவர்கள் கேட்ட மாத்திரத்தில் மறுமலர்ச்சி முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அன்புத் தலைவர் வைகோ அவர்கள் இந்த கண்டன அற போராட்டத்தில் மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் நாம் பங்கேற்க வேண்டும். நம்முடைய கண்டனத்தை வலிமையாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர்களுடைய ஏளனப் பேச்சு காரணமாக எப்படி ஜெயராமன் மீது அவதூறு பரப்புகிறார்களோ அதேபோன்று தலைவர் வைகோ அவர்கள் நியூட்டரினுக்காக நடந்தார், அணுவுலைக்காக போராடினார். இதையெல்லாம் கொச்சைப்படுத்திய காரணத்தினால்தான் அவர் நீயூட்டிரினோ நடைபயணத்தை மதுரையில் இருந்து துவக்குகின்ற போது ஒரு எளிய தொண்டன் சிவகாசி ரவிச்சந்திரன் தன்னைத்தானே தீக்குளித்து மாய்ந்து போனார். தலைவர் வைகோவுடைய மைத்துனர் மகன் அதேபோன்று தான் தன்னை மாய்த்துக் கொண்டார்.
எனவே இந்த ஏளன பேச்சுகளில் இருந்து மனம் குமரியவர்கள் இதுபோன்று மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு காரணமானவர்களும் இவர்கள் தான் என்பதை இங்கே நான் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து நீடிக்குமானால் அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்பதை இங்கே பதிவு செய்து கண்டன அறபோராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறுகின்ற விதத்தில் இதில் எடுக்கின்ற எல்லா முடிவுகளுக்கும் நீங்கள் தொடுகின்ற யுத்தத்திற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோள்கொடுக்கும் துணை நிற்கும் என்ற செய்தியை பதியவைத்து தலைவர் வைகோ அவர்களின் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கின்றேன் என கூறினார்.