Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்ட்ரியாவின் அந்த காட்சியை நீக்கியாச்சி….. இயக்குனர் மிஷ்கின் அதிரடி முடிவு….!!!

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா ஆடையே இல்லாமல் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் மிஸ்கின், “இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சியில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த காட்சியை படமாக்கும் போதே என் மனதிற்குள் ஒரு போராட்டம் எழுந்தது. இருப்பினும், அந்த காட்சியை பார்க்கும் மக்கள் முகம் சுளிக்காத வகையில் அந்த நிர்வாண காட்சியை படமாக்கி இருந்தேன்.

இருப்பினும் இந்த படத்தை குழந்தைகள் எப்படி பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து கொண்டே இருந்ததால், அந்த நிர்வாண காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டேன். பிசாசு படத்தின் கதை ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு எந்தவிதமான தயக்கமும் இன்றி அந்த படத்தைப் பார்க்கலாம்” என்றார். இத்திரைப்படம் ஆக.31ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Categories

Tech |