தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் முதல்வர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில் அதில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிகரமான அறிவிப்புகள் என்ற பெயரில் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஆண்ட்ராய்டு செல்போன், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இருசக்கர வாகனம் 20% மானியம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 24 இன்ச் எல்இடி டிவி அல்லது செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.