மரணம் என்பது என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வரக்கூடியது தான். அதற்காக தேவையில்லாத தீய பழக்கங்களை பழகிக்கொண்டு அதற்கான வினையை ஏற்கும் வகையில், மரணத்தைத் தழுவுகிறார்கள். அந்த வகையில், புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 9 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும்,
உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 567 பேர் பெண்கள் எனவும், நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள், அவர்களில் 75 சதவீதம் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக மாறி விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.