Categories
அரசியல்

ஆண்களே…! உங்களுக்கு குஷியான செய்தி…. என்ன தெரியுமா…? உ.பியில் அதிரடி…!!!!

துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் நலனுக்காக ஆண்கள் நல அமைச்சகம் ஒன்று உருவாக்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்சி ஒன்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மேரா அதிகார் ராஷ்ட்ரீய தளம்’ எனும் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண்களுக்காக ஆண்கள் நல அமைச்சகம் மற்றும் ஆண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கபில் மோகன் சவுத்ரி கூறியதாவது, “இந்தியாவில் நிலவும் சில பாரபட்சமான சட்டங்களால் ஆண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆண்கள் நல அமைச்சகம் உருவாக்கப்படும் மற்றும் தேசிய ஆணையம் அமைக்கப்படும். பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகாரம் அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் சில பெண்கள் ஆண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது தடுக்கவே இதுபோன்ற சட்டங்களை உருவாக்க பாடுபடுவோம்.” என கூறினார்.

Categories

Tech |