குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் இருதயராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, அடிதடி போன்ற பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தார். எனவே மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் இருதய ராஜாவின் மேல் இருக்கும் குற்றங்கள் குறித்த அறிக்கையை காண்பித்துள்ளார். அதைப்பார்த்த ஆட்சியர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி வழங்கியுள்ளார். இதன்பிறகு காவல்துறையினர் இருதய ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.