வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் 4 பேர் மீதுள்ள குற்றங்கள் குறித்த அறிக்கையை காண்பித்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குமாறு கூறியுள்ளார். இந்த அறிக்கையைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதனையடுத்து தருண், சதாசிவம், தர்மராஜ், பழனிச்சாமி ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.