Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஐயா..! எங்களை கொன்னுடுவாங்க..!… ”காப்பாத்துங்க”…. பதறிய காதல் ஜோடி…. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

ஆணவக்கொலையில் இருந்து காப்பாற்றுமாறு சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் தாக்கல் செய்த வழக்கில் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ரம்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா காதலன் சுரேந்திரனை அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தமது தந்தை மற்றும் உறவினர்கள் ஆணவ கொலை செய்ய முயற்சிப்பதாக உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரம்யா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் இருவரையும் கொலை செய்ய தங்கள் உறவினர்கள், வெளியாட்களை வைத்து கண்காணித்து வருவதாக ரம்யா தனது மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ள ரம்யா, சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் ரம்யா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ரம்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .

Categories

Tech |