Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டோ-சரக்கு வேன் மோதல்….. காயமடைந்த 4 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது அஜித் என்பவர் ஓட்டி வந்த வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அழகர்சாமி, கார்த்திக், சுரேஷ், அஜித் ஆகிய நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அழகர்சாமிக்கு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |