Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர் தலை, கைகளை துண்டித்து உடல் தீ வைத்து எரிப்பு”…. கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் என்பது தெரியவந்தது. கொலைசெய்தவர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்று காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். மேலும் துண்டிக்கப்பட்ட அவருடைய கை மற்றும் தலையை தேடி வருகின்றார்கள்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையான சிராஜூதின் தனது கள்ளக்காதலி 45 வயதுடைய ஜூனத் என்பவருடன் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கொலைக்கு பழிவாங்கும் விதத்தில் இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஜூனத்திடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்தார். கடைசியில் தனது ஆட்டோவில் ஜூனத் வீட்டுக்கு சென்றதும், மறுநாள் காலை அங்கிருந்து ஆட்டோ கிளம்பி சென்றதும் தெரிய வந்துள்ளது. அவர் பிணமாக கிடந்த இடத்தில் அவருடைய ஆட்டோ வந்து சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவருடைய கள்ளக்காதலி ஜூனத் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஜூனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிராஜூதினை தனது மற்றொரு கள்ளக்காதலன் 42 வயதுடைய மகேஷ் என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தலை, கைகளை துண்டித்து உடலை தீ வைத்து எரித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் பேசியதாவது, சிராஜூதினுக்கும், ஜூனத்துக்கும் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதற்கிடையே நகைக்கு ஆசைப்பட்டு விருகம்பாக்கத்தில் துணை நடிகர் கொலை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மேலும் ஜூனத்திடமிருந்து சிராஜூதின் நிறைய பணம் வாங்கி உள்ளார். தற்சமயம் ஜூனத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சிராஜூதின் பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். ஆனாலும் அவ்வப்போது ஜூனத் வீட்டிற்கு மட்டும் வந்து சென்றுள்ளார். இதற்கிடையே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வரும் மகேஷ் என்பவருக்கும், ஜூனத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தன்னிடம் வாங்கிய பணத்தை சிராஜூதின் தர மறுத்ததாக மகேஷிடம் கூறினார். மீண்டும் பணத்தை கேட்டு தரவில்லை என்றால் சிராஜூதினை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளார்கள்.

அதன்படி சம்பவத்தன்று சிராஜூதின், மகேஷ் இருவரும் குடித்துவிட்டு ஜூனத் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஜூனத் மகளிடம் சிராஜூதின் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் மகேஷ் சிராஜூதினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த சிராஜூதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மேலும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்கு உடலை அடையாளம் கண்டு பிடிக்காமல் இருப்பதற்கும் தலை,கைகளை துண்டித்து விட்டு வெவ்வேறு இடங்களில் போட்டு தீ வைத்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.

இதையடுத்து மகேஷ் வாங்கி வைத்திருந்த கத்தியால் சிராஜிதின் தலை, கைகளை துண்டு துண்டாக வெட்டி அதை பைக்கில் எடுத்துச் சென்று திருமழிசை பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு உடலை அவருடைய ஆட்டோவில் எடுத்து சென்று கன்னம்பாளையம் பகுதி குப்பை மேட்டில் வீசி தீ வைத்து எரித்து விட்டு ஆட்டோ நம்பர்களையும் அழித்துவிட்டார்கள். அதன்பின் ஆவடியில் ஒரு பகுதியில் ஆட்டோவை விட்டுட்டு சென்று விட்டார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மகேஷ், ஜூனத் இருவரையும் திருவேற்காடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துண்டிக்கப்பட்ட சிராஜிதின் தலை மற்றும் கைகளில் எரித்த இடத்தை மகேஷ் மாற்றி மாற்றி சொல்வதால் இன்னும் அவருடைய தலை, கைகள் கிடைப்பதில்லை அதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் உடலை வைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்து அவருடைய உறவினர்கள் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் கூறினார்கள்.

Categories

Tech |