Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து”… புகைமண்டலமாக காட்சியளிக்கும் பகுதி… பெரும் பரபரப்பு…!!!!!

குஜராத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் எனும் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு இருந்த 56 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி இருக்கின்றனர். இந்த நிலையில் தீ விபத்தில் கிடங்கில் உள்ள டயர்கள் மற்றும் எண்ணெய் போன்ற இருசக்கர வாகன உதிரி பாகங்கள் அதிக அளவில் எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகின்றது. மேலும் இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தலைமை தீயணைப்பு அதிகாரி பார்த் பிரம்பட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |