அதிமுகவை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமான் உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான் அதிமுக கிடையாது என்று ஒரு கருத்தை கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரட்சி தலைவர் மறைந்த பிறகு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைந்த பிறகும் இன்றைக்கு ஒரு கோடி 46 லட்சம் வாக்குகள் இருக்கின்றது. இந்த இயக்கத்தை எந்தக் கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.
அந்த வகையில் வீறுகொண்டு ஒரு கோடியே 46 லட்சம் வாக்குகள் பெற்று ஒரு இமயமலை போல உயர்ந்து இருக்கின்றது. இமயமலை போல இருக்கின்ற இந்த இயக்கத்தைப் பார்த்து, பரங்கிமலை போல தாழ்ந்து கிடப்பவர்கள் எல்லாம் சொல்வது உண்மையிலே 21ஆம் நூற்றாண்டினுடைய ஒரு சிறந்த நகைச்சுவையாகக் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
அதிமுகவில் நிச்சயமாக மாற்றம் தேவை தலைமை நம்பி அதிமுக இல்லை என்றமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படியெல்லாம் அவர் சொல்லவில்லை. நீங்கள் தான் அப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள், வியூகம் காரணமாக சில கருத்துக்கள் வந்து சொன்னார். வியூகங்கள் பொருத்தவரையில் நல்ல வியூகங்கள் அமைத்து மக்களை சந்தித்து இருக்கின்ற ஒரு இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்த கருத்தின் அடிப்படையில் எந்த ஒரு வியூகத்தில் இருந்து எந்த ஒரு குழப்பமும் இல்லை, எந்த ஒரு ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை என தெரிவித்தார்.