நடந்துவரும் IPL சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான்(25) விளையாடி வருகிறார். சென்ற IPL சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் நேற்று முன்தினம் ஹைதராபாத் அணிக்கு எதிராக டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். நடப்பு சீசனின் முதல் 2 போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ரன்களை கொடுத்து இருந்தார். எனினும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி அசத்தி இருந்தார். அதன் பயனாக அவரது அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றியடைந்தது. ஹைதராபாத் அணியின் பிரதான பேட்ஸ் மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.
அவ்விருதை பெற்றுக் கொண்ட அவர் அதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் அம்மாவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சக லக்னோ வீரர் தீபக் ஹூடாவுடனான கலந்துரையாடலில் பேசிய அவர் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எனது அம்மாவுக்கு இவ்விருதை நான் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அம்மா என் கிரிக்கெட் ஆர்வத்துக்கு உறுதுணை புரிந்தவர் ஆவர். ஆட்டம் முடிந்ததும் நான் என் தொலைபேசியில் வீடியோ கால் வாயிலாக அம்மாவிடம் பேசினேன். இந்நிலையில் ஆட்டத்தில் நடைபெற்றதை கூறினேன். தற்போது கடவுளின் அருளால் அம்மா நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்து உள்ளார். இந்த போட்டியில் லக்னோ அணி முதலாவதாக பேட் செய்து 169 ரன்கள் சேர்த்து இருந்தது. அதனை தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.