Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியை மாற்ற மறைமுக அழுத்தமா…? திமுக அரசை கண்டிக்கும் சீமான்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து  அவற்றை பாதுகாக்க முனைப்போடு செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நலனை புறந்தள்ளி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு அரசின் பொறுப்பற்ற செயல்.

மேற்கு தொடர்ச்சி மலை தந்த கொடையான நீலகிரி மலை மனிதர்களால் அழிந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையை பாதுகாப்பாக சிறப்பாக செயல்பட்டு மக்களின் பேரன்பையும், பெருமையும் பெற்றவர் மாவட்ட ஆட்சியர் திவ்யா. முறைகேடான மரங்களை வெட்டுவதற்கு தடை,  ஆழ்துளை கிணறு அமைக்க தடை, நெகிழிப்பை முழுமையாக தடை, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மூடி சீல் வைப்பு, தொற்று பரவல் தடுப்பு பணிகளில் முதலிடம் என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, நீலகிரி மாவட்டத்தில் தீர்வு காண முடியாத பெரும் சிக்கலாக இருக்கின்ற யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

எந்த தொய்வும் இன்றி செயல்படக்கூடிய அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள சொகுசு விடுதி உரிமையாளர்களுக்கு சாதகமாக மாவட்ட ஆட்சியரை மாற்ற திமுக அரசு முடிவெடுத்துள்ளது கண்டனத்திற்குரியது.  ஆகவே மாவட்ட ஆட்சியரை மாற்றும் திமுக அரசின் முடிவை கைவிட வேண்டும். மக்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசியல் அழுத்தம் கொடுத்து இடம் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

 

Categories

Tech |