கார்ப்பரேட் முதலாளி வருவதற்குள் என்னுடைய கவர்மெண்ட் வந்து விட வேண்டும் என்று நான் துடிக்கிறேன் என சீமான் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆடு மாடு வளர்த்தல் அரசு பணியை மாற்றுவேன் என்றது கேலி பேசியவர்கள் அவர்கள் தான். இப்போ ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு மானியம் கொடுக்கீரர்கள். என்னிடம் எப்படி சம்பளம் கொடுப்பேன் என்று கேட்டீர்கள் அல்லவா, இந்த மானியம் எப்படி கொடுப்பீர்கள் ? பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பேன் என்று சொல்கீறீர்கள்… அது உங்கள் வீட்டு குழாயை திருகினால் வந்துவிடுமா ?
அது மாட்டில் இருந்துதான் வரவேண்டும். உலகமே இயற்கை வேளாண்மைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. நஞ்சில்லாத உணவு அதுவே எங்கள் கனவு என போய்க்கொண்டு இருக்கிறோம். அப்பொழுது ஆடு மாடு கழிவு தானே இயற்கை உரம். பண்ணைகளை உருவாக்கி வேளாண்மை செய்வோருக்கு மானியம். அதான் நான் செய்திடுவேன் என்றேன். கார்ப்பரேட் முதலாளி வருவதற்குள் என்னுடைய கவர்மெண்ட் வந்து விட வேண்டும் என்று நான் துடிக்கிறேன்.
இல்லையென்றால் அவன் எடுத்து விட்டு போய்விடுவான். எனக்கு உயிர் தேவையாக உணவு இருக்கிறது. உணவை பெரிய சந்தை ஆக்கிவிட்டால் ஏழை எளிய மக்கள் நாங்கள் எப்படி வாழ்வது ? அதனால் தான் ஆள வேண்டும் என்று துடிக்கிறோம். தன் சிந்தனை ஏதாவது இருக்கிறதா ? எல்லாம் காப்பி காப்பி எடுத்து பேஸ்ட் பண்ணி ஒட்டி விட வேண்டியது என சீமான் திமுக அதிமுகவை கடுமையாக சாடினார்.