சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதே சமயத்தில் படத்தின் ப்ரெமோசனுக்காக இயக்குநர் நவீன் மற்றும் பாடகி சின்மயி போன்றோரை தான் பணம் கொடுத்து இது போன்ற கருத்துக்களை பதிவிட கூறியதாகவும் இணையதளங்களில் செய்தி பரவி வருவதாக தெரிவித்த நடிகர் சதீஷ் அது பொய்யான தகவல் என்றார். ஆடை தொடர்பாக பேசியதை இணையதளங்களில் பரப்பியது போல், தான் பேசிய நல்ல விஷயங்களையும் பரப்புங்கள் என நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.