Categories
மாநில செய்திகள்

“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஒருவர் கைது…!!!!!!

 ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில்  கிணத்துக்கடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்  65 வயது மூதாட்டி ஒருவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலுச்சாமி என்ற நபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். மூதாட்டி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டதைப்பார்த்து வேலுச்சாமி தப்பிக்க முயற்சி செய்தார்.

இதனை தொடர்ந்து வேலுச்சாமியை  விரட்டிப் பிடித்த பொதுமக்கள் இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுசாமியை  பொதுமக்களிடமிருந்து  மீட்டு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |