ஆடு திருட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் விவசாயியான சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்காக கொட்டகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கொட்டகையில் இருந்த 2 ஆடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சித்ததை பார்த்து சிவபாலன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிவபாலனின் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவபாலன் ஒரு வாலிபரை மட்டும் மடக்கி பிடித்து மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ஆம்பள்ளி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார்த்திக், அருணகிரி ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.