Categories
ஆன்மிகம்

ஆடி அமாவாசை விரதம்: முன்னோர்களுக்கு படையல் வைப்பது எப்படி?…..!!!!

2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் 8) ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது. ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை நீடிக்கிறது. அதனால் ஆகஸ்ட் 8 அன்று சூரிய உதயத்திற்கு பின் எப்போது வேண்டுமென்றாலும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம். அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.

ஆடி அமாவாசை விரதம் :

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து பூ வைத்து ஆர்கள் முன் ஒரு இலையில் சமைத்த உணவுகளைப் படைக்க வேண்டும்.

பின்னர் படங்களுக்கு தீபாராதனை செய்த பின்னர், அவசியம் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். அதன் பின்னர் இலையில் முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களும் சாப்பிடலாம். இதனால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

 

 

Categories

Tech |