Categories
தேசிய செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறு…. அத்தைகளை போட்டு தள்ளிய மருமகள்…. அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அத்தைகளை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவா மாநிலத்தில் உள்ள சியோலில் கிராமத்தை சேர்ந்தவர் ரோவினா. இவர் தனது கணவர் மற்றும் மார்டா, வேரா என இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால் ரோவினாவுக்கும் அவரது இரண்டு அத்தைகளுக்கும் எப்போதும் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்கள் சண்டையிட்டு வந்தனர். மருமகள் என்ன செய்தாலும் அதில் குறை கூறி வந்த அத்தைகள் மருமகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்து வந்தனர். இதனால் தனது இரண்டு அத்தைகளையும் கொலை  செய்ய ரோவினா முடிவு செய்தார்.

இதனால் கூலிப்படை வைத்திருக்கும் ராஜபள்ளி என்பவரை தொடர்பு கொண்டு தனது அத்தைகளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த ஞாயிறு அன்று ராஜபள்ளி உதவியுடன் தனது இரண்டு அத்தைகளையும் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தனது குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றார். வீட்டிற்கு வந்த ரொவினாவின் கணவன் இருவரும் இறந்து கிடப்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மருமகளையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |