Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடம்பரத்தை தவிர்க்க சொன்ன செந்தில் பாலாஜி…. இதை செய்ய கட்டளை…. ரொம்ப நல்ல மனசு…!!!

பொள்ளாச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி,ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய  அவர், திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளைச் செய்வதைத் தவிர்த்து விட்டு, அந்த நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நலத்திட்ட உதவிகள் தான் திமுகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எனக் கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். முதல்வர் அவர்கள் கோவை மாவட்டத்தை பொருத்தவரை வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடையும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார்.

Categories

Tech |