சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோலமுடுகு பகுதியில் கூலித்தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிவாவை கைது செய்தனர்.