Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. விவரம் திருத்த அவகாசம்…. தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!!!!!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச்சில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும் இரண்டாம் தாள் இருக்கு 4 லட்சத்து 1886 பேரும் என மொத்தம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி இருக்கின்றனர். அதனை பரிசீரித்து விண்ணப்ப விவரங்களை ஆன்லைனில் திருத்த வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் விண்ணப்ப விவரங்களை ஜூலை 25ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் விண்ணப்பதாரரின் அலைபேசி எண், ஈமெயில், முகவரி, கல்வித் தகுதியில் மாற்றம் செய்ய இயலாது. இதற்கு மேல் விண்ணப்ப விவரங்களை திருத்த கோரியும் கோரிக்கை மனுக்கள் ஏற்கப்படாது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |