Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல்…. பட்டதாரிகள் அதிர்ச்சி….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இதன்காரணமாக அரசு பள்ளியில் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த  பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

அதாவது டி.ஆர்.பி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில்  குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்களில் மாற்றுத் திறனாளிகள், இட ஒதுக்கீடு பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டி.ஆர்.பி இந்த 5% இட ஒதுக்கீட்டை தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிடவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் சலுகையை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சனையை டி.ஆர்.பி விரைந்து சரி செய்ய வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

Categories

Tech |