Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது.

Categories

Tech |