தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.