Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….? கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 2011-ஆம் ஆண்டு கடைக்கு சென்றார். அப்போது திடீரென மாயமான மாணவியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான முத்தையன்(46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து அதே ஆண்டு மே மாதம் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்தார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் முத்தையனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் முத்தையனுக்கு 6000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |