இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ( பிப்.15 ) முதல் நடைபெற இருந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.