Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் பணி நிரந்தரம்” தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா….? முதல்வருக்கு திடீர் கடிதம்….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள மூன்று அரை நாட்கள் பணியை அனைத்து வேலை நாட்களாக மாற்ற வேண்டும்.

பகுதி நேர பணியை முழு நேரமாக மாற்ற வேண்டும். மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, குடும்ப நலநிதி, போனஸ், பண்டிகை முன்பணம், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற கோரிக்கைகளை உடனடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இது தொடர்பாக எஸ். செந்தில்குமார் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பலமுறை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டோம். சட்டசபையில் கூட பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள். பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் 16,000 பேர் வேலையில் சேர்த்தோம். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்து போனவர்கள் என 4000 பணியிடங்கள் தற்போது காலியாகிவிட்டது.

12,000 பேர் 10,000 தொகுப்பூதிய சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தொகுப்பூதிய சம்பளத்திலேயே 10 ஆண்டுகளை கடந்து விட்டோம். பலருக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் கூடிய விரைவில் பணி நிரந்தரம் என்ற அறிவிப்பை முதல்வர் கூற வேண்டும் என்று கூறினார். மேலும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது மட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளும், கடிதங்களும் முதல்வருக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டாலும் நிதி நிலைமையை காரணம் காட்டி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

Categories

Tech |