ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.அதன்படி திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ததால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆசிரியர்களை மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.