கர்நாடக மாநிலத்தில்கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் பணிபுரியும் விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தற்போது அந்த குழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13,000, UGC நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.11,000 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அம்மாநில அரசு விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை குறைந்தபட்சம் மாதம் ரூ.26,000 லிருந்து அதிகபட்சமாக ரூ.32,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்கள் மற்றும் UGC நிர்ணயித்த தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.32,000 வழங்கப்படும்.