Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழக ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமானது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் குறைந்த பலனே உள்ளதால்,அதை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தரப்பில் போராடி வருகின்றனர். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதுகுறித்து ஆசிரியர்  சங்கம் சார்பில் மனு ஒன்றை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்து, விவரம் கேட்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மனுவுக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த படுமா? என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 2022-23 ஆண்டு நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதேபோல் பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |