கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் மாறுதல் மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பை, தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடை மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.