அரசு பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிச.,31-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2022-23 ஆம் வருடத்திற்கான படிப்பு உதவித்தொகையை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் 7.2 லட்சத்துக்குள் இருப்பதோடு தங்களுடைய பணி மற்றும் ஊதிய விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம்.