Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியரை ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்ட மாணவன்” எதற்காக தெரியுமா….? பகீர் பின்னணி இதோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் படிக்கும் மாணவன் சரிவர படிக்காததால் அவரை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்நிலையில் மாணவருக்கு திடீரென ஒரு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்தோ கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த மாணவன் ஆசிரியரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அதன்பின் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக சுடத் தொடங்கினான்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த மாணவன் விடாமல் ஆசிரியரை துரத்தி சென்று சுட்டதில், ஆசிரியர் உடம்பில் 3 இடங்களில் குண்டு பாய்ந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை பிடித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை வாங்கினார். இதைத்தொடர்ந்து காயம் அடைந்த ஆசிரியரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு மாணவன் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |