ஆசியக்கோப்பை மகளிர் டி20 சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய (சீனியர் பெண்கள்) அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் வங்கதேச நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த சூழலில் ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆசியக்கோப்பைக்கான மகளிர் இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா (து.கே), தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (வி.கே), சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், பி வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ் , கேபி நவ்கிரே.
காத்திருப்பு வீரர்கள்:
தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.
Standby players: Taniyaa Sapna Bhatia, Simran Dil Bahadur.#TeamIndia | #WomensAsiaCup | #AsiaCup2022
— BCCI Women (@BCCIWomen) September 21, 2022