Categories
தேசிய செய்திகள்

ஆசியாவிலேயே முதன் முறை…. கொரோனா பாதித்து 65 நாட்கள்…. வியக்க வைத்த 12 வயது சிறுவன்….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் சவுரியா(12) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அவரது நுரையீரல் தீவிரமாக தொற்றுக்குள்ளானது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை விமானம் மூலம் லக்னோவில் இருந்து ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் எக்மோ உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து  மருத்துவர்கள் கூறியது, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமலே  சிறுவன் முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்று தெரிவித்தனர். மேலும் ஆசியாவில் இந்த சம்பவம்  இதுவே முதன் முறையாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |