ஆசனவாய் பகுதியில் வாட்டர் பாட்டிலை செலுத்தி சிக்கி தவித்து வந்த நபரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ஒரு சிலர் மனைவிக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் எதையும் வெளியே கூற பயப்படுவார்கள். அதே போன்று தான் ஈரானில் மனைவிக்கு பயந்த கணவர் ஒருவர் தனது ஆசனவாயில் வாட்டர் பாட்டில் இருப்பதை மூடி மறைத்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று அவர் தன்னால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது மருத்துவர் அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். அவரது ஆசனவாயில் வாட்டர் பாட்டில் ஒன்று சிக்கி இருந்தது.
250 மில்லி லிட்டர் நீரை நிரப்பும் 19 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த வாட்டர் பாட்டில் எப்படி ஆசனவாய் பகுதியில் சிக்கியது என்பது குறித்து விசாரணை செய்தும், நோயாளி உண்மையை கூற மறுத்துவிட்டார். அதன் பிறகு ஒரு வழியாக அறுவை சிகிச்சை இல்லாமல் ஆசனவாய் வழியாகவே மருத்துவர்கள் அந்த வாட்டர் பாட்டிலில் வெளியில் எடுத்தனர். மேலும் அந்த வாட்டர் பாட்டில் அவரது உடலில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை . இந்த வாட்டர் பாட்டிலை சம்பந்தப்பட்ட நபரே உள்ளே செலுத்தி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் பாலியல் திருப்திக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.