Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆங்கிலேயர் கால கட்டிடத்தை இடிங்க” மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பழைய கட்டிடத்தை இடிக்குமாறு மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றமொன்று இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் அங்கு சென்று விளையாடுவது சாப்பிடுவது என கட்டிடத்தின் ஆபத்தை உணராமல் அங்கு செல்கின்றனர். எனவே இந்தக் கட்டிடத்தை எடுக்குமாறு பலமுறை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் சத்தி- பண்ணாரி சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பழைய கட்டிடத்தை இடித்தல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள்  வரும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே நகராட்சி அதிகாரி சரவணகுமார்போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு ஆணையர் சரவணகுமார் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |