ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
Categories
ஆக.,1 முதல் ஆசிரியர்களுக்கு ஆப்பு….. இதை செய்யாவிட்டால் சம்பளம் பிடித்தம்…. வெளியான தகவல்….!!!!
