உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்ராவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு நிரப்பும் மையத்திற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பற்றியதால் அதனை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே குதித்து தப்பினார். கரும் புகையுடன் பல அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததால் சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எரிவாய்வு நிரப்பிய டேங்கர் வெடிக்காமல் தடுக்கப்பட்டால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.